Thursday, January 14, 2010

Online நட்பு

அறிமுகம் இல்லாமலே
நமக்குள்ளே ஒரு நட்பு

நான் உருவத்தையும்
வாசிக்கையில் குரலையும்
உருவகப்படுத்துகிறேன்

தினமும் பேசாவிட்டாலும்
தொடர்ச்சியாக இரண்டு முன்று நாட்கள்
பார்க்கவில்லை [Posting] என்றால்
மனம் பரிதவிக்கிறது

உனக்கும் எனக்கும் நடுவில்
வார்த்தைகள் நிற்கின்றன
நட்பாக

தினம்தோறும் வருகிறோம்
சொல்லித்தான் பிரிகிறோம்

மீண்டும் வருவோம் என
மிதமான நம்பிக்கையில்

No comments: