சிறகடித்து உலா வந்த
சின்னச்சிறு வயதில்
தீண்டாமை பாவம் என்றோம்
வரதட்சணை குற்றம் என்றோம்
புத்தகத்தில் படித்த படி
வாழ்வில் எதிர்ப்போம்
என்று வீர வசனம்
பேசினோம்....
ஆனால் இன்று???
10 வயதில் பார்வையற்றோருக்கு வாழ்க்கை தர வேண்டும்
என்று ஆசை. ஆனால் நாம் வாழ்வதற்க்கு
நமக்கே இங்கு வாழ்க்கை இல்லை.
நாம என்ன வாழ்கை தருவது என்று நமக்கு நாமே கேள்வி
14,15 வயதில் உடல் ஊனமுற்றவருக்கு வழிக்காட்ட ஆசை
இந்த அவசர கால உலகத்தில் நாம ஓட வேண்டியதாக உள்ளதே
இனி எங்கு அவர்களை
அழைத்து செல்வது நம் வழியில்
என்று எண்ணியே கலைந்தது
ஆசை...
வாழ்க்கை என்பது ஒருமுறை தான்
மனதுக்கு பிடித்த ஆண் / பெண்
உடன் வாழ்க்கை என்று வாழவும் வழியில்லை
நாம் விரும்புவர்களையும் &
நம்மை விரும்புகிறவர்களையும் வேண்டாம் என்று
விட்டு செல்லவும்
மனமில்லை ..
சுற்றதினை எதிர்த்திடவும்
துணிவில்லை
கலாச்சாரத்தையும் குலத்தையும்
பற்றியே செல்கிறது வாழ்க்கை
பிடித்தவரை மறந்து
வலிகாட்டிடாத , விரும்பி அடையாத
வாழ்க்கை
சிறு வயது முதல்
ஆயுள் முழுவதும்
எதோ ஒன்றை சார்ந்தே
செல்கிறது வாழ்க்கை பயணம்
என்னடா வாழ்க்கை ,இந்த வாழ்க்கைய , சமுதாயம், பெற்றோர் என்று மற்றவர்களை
காரணம் கூறியே நாம்
அரசியல்வாதி , பச்சோந்தி மாதிரி
நமக்கு நாமே நம் எண்ணங்களை மாத்தி கொள்கிறோம்
இது வேண்டாம்
என்று சொல்லிட மனமுமில்லை
பிடித்தாய் வாழ துணிச்சளுமில்லை
வாழ்ந்தே தீர வேண்டியா
மானிட பிறவியடா நாம்
என்ற எண்ணமே
வாழ்க்கை வாழ்வதற்கே என்று
சொல்லி சிரிகிறது ..
(உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதியது..
http://tamil.blogkut.com/uraiyaadal.php )
Thursday, January 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)

14 comments:
எனக்கு எழுத கற்று தர முடியுமா..?
Nice Thoughts...
ALagiya sinthanai ungaluku....
anaivarin manathilum ulla kumuralai, alagaai kavi thoduthu irukinga.. keep rock..
@ Sethu
வீர வசனம்
பேசினோம்....
ஆனால் இன்று???
Arainthathu Kelvigal.........
Azhntha sinthanai.....
Thodaratum Thedalgal...........
அனைவரின் எண்ணங்களின் பிரதிபலிப்பு சேது...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...:)
Unmai than neenga kavithai ah vaichathu... silar kanneer ungal kavithail therikirathu... really nice
உண்மையான வரிகள்..!
வெற்றிபெற நல்வாழ்த்துக்கள் சேது :)
அதிகபட்ச மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளீர்கள்...
Yaar melayavadhu kobama sethu? :)
hmmm... ethu than uruppadiyaai panninom endra kelvi elave seigirathu.. :)
Dont worry.. thodarndhu sellattum payanangal.. (atleast alagaana ninaivugalodu..)
vaalthugal sethu..
உயர்ந்த எண்ணங்கள் சிலருக்கு தான் இருக்கு. அது உங்கள் கவிதையில் அழகாக வெளிப்பட்டு இருக்கு. மனதுக்கு பிடித்தவரை மணப்பதனால் மட்டும் மகிழ்வு வருவதில்லை, மணந்தவரை மனதுக்கு பிடித்தவராய் வைப்பதில் தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
எழுத்து பிழைகளை சரி பண்ணிவிட்டு பதிவிட்டிருக்க கூடாதா..?
வெற்றிபெற வாழ்த்துக்கள்..
நாம் என்ற எண்ணமே
வாழ்க்கை வாழ்வதற்கு
என்று சொல்லி சிரிகிறது .. //
@சேது உங்கள் அருமையான நல்எண்ணங்களின் பிரதிபலிப்பு உரையாடல் கவிதையான விதம்!
மிக அருமை சிந்திக்க வைத்தது!
தொடர்ந்து எழுதுங்கள்....
அன்பு வாழ்த்துக்கள் சேது! :)
நாம் என்ற எண்ணமே
வாழ்க்கை வாழ்வதற்கு
என்று சொல்லி சிரிக்கிறது .. //
@சேது உங்கள் அருமையான நல்எண்ணங்களின் பிரதிபலிப்பு உரையாடல் கவிதையான விதம்!
மிக அருமை சிந்திக்க வைத்தது!
தொடர்ந்து எழுதுங்கள்....
அன்பு வாழ்த்துக்கள் சேது! :)
nice
good one sethu..
VALKKAI - VALVANKU VALVATHRKE
Post a Comment